பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து..!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 9:18 am
Quick Share

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மதிப்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

modi - updatenews360

அவரது தனித்தன்மை வாய்ந்த பார்வை, தனித்துவ தலைமை பண்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது. அவர் நீண்டகாலம் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ரத்ததான முகாம், தடுப்பூசி முகாம் உள்ளிட்டவை தொண்டர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 204

0

0