“காங்கிரஸ் இப்படித்தான், பிடிக்கலைன்னா வெளிய போங்க”..! கபில் சிபலை கார்னர் செய்த மக்களவை காங்கிரஸ் தலைவர்..!

19 November 2020, 12:00 pm
KaPil_Sibal_UpdateNews360
Quick Share

பீகார் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறிய கருத்து தொடர்பாக காங்கிரசின் கபில் சிபலை, காங்கிரசின் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்கள் பொதுவெளியில் இப்படி பேசுவதற்குப் பதிலாக கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று கூறினார்.

ஏ.சி அறைகளிலிருந்து பிரசங்கங்களை வழங்கியதற்காக சவுத்ரி சிபலைக் கண்டித்தார். அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் மற்ற கட்சிகளில் சேரலாம் அல்லது தங்கள் சொந்த கட்சியைத் தொடங்கலாம் என்றார்.

எதுவும் செய்யாமல் வெறுமனே பேசுவது உள்நோக்கத்தைக் கொண்டது என்று பீகார் தேர்தலின் போது,கபில் சிபல் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்யாததைக் குறிப்பிட்டார். “கபில் சிபல் இதுபோன்ற வெட்கக்கேடான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடுவதற்கு பதிலாக ஒரு கட்சிக் கூட்டத்தில் பிரச்சினைகளை எழுப்பியிருக்க முடியும். அவர் ஒரு மூத்த தலைவர் மற்றும் கட்சியின் தலைமையை நேரடியாக அணுகக்கூடியவர்.” என அவர் மேலும் கூறினார்.

“கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்களுக்கு புதிய கட்சி அமைக்க அல்லது காங்கிரஸ் தங்களுக்கு சரியான இடம் இல்லை என்று நினைத்தால் வேறு ஒரு கட்சியில் சேர சுதந்திரம் உள்ளது” என்று சவுத்ரி, செய்தியாளர்களிடம் கூறினார்.

பீகார் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறனுக்காக காங்கிரஸ் தலைமையை கபில் சிபல் விமர்சித்ததன் பின்னணியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. அங்கு அது போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே பெற்றது. ஆகஸ்ட் மாதம் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குழுவில் சிபல் ஒரு பகுதியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்கும் வழிகள் குறித்து ஆலோசனைகளை அப்போது வழங்கினார்.

“காங்கிரஸ் மற்றும் அதன் தேவை குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டதாகத் தெரிகிறது. முன்னதாக அவர் அதைப் பற்றி பகிரங்கமாகப் பேசியிருந்தார். ஆனால் பீகார் அல்லது கடந்த ஆண்டு தேர்தலுக்குச் சென்ற பிற மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் அவர் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதைக் காணமுடியவில்லை. ஏ.சி அறைகளில் அமர்ந்து பிரசங்கங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர் களத்தில் வேலை செய்ய வேண்டும். எதையும் செய்யாமல் மற்றவர்களுக்கு சொற்பொழிவு செய்வது உதவாது.” என்று சவுத்ரி கூறினார்.

Views: - 0

0

0