7 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று 6,996 பேருக்கு கொரோனா உறுதி

Author: kavin kumar
11 October 2021, 8:59 pm
TN corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் பரவிய இந்த வகை வைரஸ் இன்று உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரள மாநிலத்தில்தான். இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 16,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,01,419 ஆக குறைந்துள்ளது. கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 73 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 66,702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26,342 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் தொற்று குறைந்திருந்தாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தற்காப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 251

0

0