பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் : திருப்பதி தேவஸ்தானம் முடிவு!!!

27 February 2021, 7:25 pm
TTD -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ 2937. 82 கோடி வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டுக்கு அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2021 – 22 ஆண்டுக்கான ரூ 2937.82 கோடியில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே முன்பதிவு செய்து கோவிட் விதிகளின்படி பக்தர்களை ஏப்ரல் 14 முதல் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகளில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக கொரோனா பரிசோதனை முடிவு அறிக்கை கொண்டு வர வேண்டும். கோவிட் 19 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து தேவஸ்தான ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு கோ மாதா திட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் வரவேற்புள்ளது. எனவே பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம்.
ஏழுமலையான் கோயிலில் உள்ளது போன்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் துளபரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப எடைக்கு எடை காணிக்கை செலுத்தலாம். மற்ற கோயில்களை தேவஸ்தானத்தின் கீழ் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கோயில்களுக்கு ஸ்ரீவானி அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி வழங்கப்படும். தேவஸ்தான திருமண மண்டபங்களின் கட்டுமானம், குத்தகை மற்றும் பராமரிப்பு தொடர்பான சீரான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருக்கும் திருமண மண்டபங்களை முறையாக பராமரித்தி நஷ்டத்தை குறைப்பதற்கும் முடிவு செய்துள்ளோம். டி.டி.டியின் கீழ் உள்ள ஆறு வேதப் பள்ளிகளின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத ஆராய்ச்சி பீடம் என்று மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பதி பர்டு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ள வெங்கடேஸ்வரா குழந்தைகள் மருத்துவமனைக்கு ஒதுக்கி சிவில், எலக்ட்ரிக்கல், ஏசி போன்ற மேம்பாட்டு பணிகளுக்கு ரூ .9 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதிய ஒபிடி கட்டிடத்தில் ரூ .3.75 கோடி செலவில் மூன்றாம் மாடி விரிவாக்க பணிகளுக்கான டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. டி.டி.டி பிரசாதம், அண்ணா பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நெய், தற்போதுள்ள 82.4 மெட்ரிக் டன்னிலிருந்து 180.4 மெட்ரிக் டன்னாக தொட்டிகளின் திறனை அதிகரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனால் நெய் இருப்பு ஆறு நாட்களில் இருந்து 14 நாட்களாக அதிகரிக்க முடியும். திருமலையில் உள்ள அனைத்து விடுதி, ஓய்வு விடுதிகளில் மற்றும் மின்சார நுகர்வோருக்கு பொறுப்புணர்வை அதிகரிக்க ஆந்திர மாநில தென் பிராந்திய மின் வினியோகத்தின் மூலம் மின்சார மீட்டர்களை அமைப்பதற்கான ஒப்புதல். திருமலையில் படிப்படியாக 50 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி ஆற்றலை உருவாக்குவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

ஜம்மு , மும்பையில் பெருமாள் கோயில்கள் கட்ட விரைவில் பூமி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீவாரி மேட்டுவின் பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள ராம கோயில் கட்டுமான அறக்கட்டளை தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கினால், பெருமாள் கோயில் அல்லது பஜனை மந்திர் அல்லது யாத்ரீகள் விடுதி என அவர்கள் விரும்பியதை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் செயல் அதிகாரி கே.எஸ்.ஜவஹர் ரெட்டி, குழு உறுப்பினர்கள் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி, சிவகுமார், கோவிந்த ஹரி, டி.பி. அனந்தா, ராமுலு, வாணி மோகன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Views: - 7

0

0