லைஃப் மிஷன் கமிஷன் ஊழல்..! பினராயி விஜயன் மகளுக்கும் தொடர்பு..? கேரள அரசியலில் புதிய புயல்..!

14 September 2020, 4:31 pm
pinarayi_vijayan_UpdateNews360
Quick Share

லைஃப் மிஷன் கமிஷன் ஊழலில் பினராயி விஜயன் அரசாங்கம் சிக்கியுள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் பினராயி விஜயனின் மகளுக்கும் இந்த ஊழலில் பங்கு இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

“லைஃப் மிஷன் கமிஷன் மோசடி தொடர்பான விசாரணை விரைவில் விஜயன் மகள் வீணாவை எட்டும். இதுதான் எனக்குத் தெரிந்தவற்றின் படி இப்போது வெளிவருகிறது” என்று சுரேந்திரன் கூறினார். மேலும் விஜயன் உடனடியாக பதவியிலிருந்து வெளியேறி இந்த விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

பினராயி விஜயனின் செல்லத் திட்டமான லைஃப் மிஷன் திட்டத்திற்கு தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் ஒப்புதல் பெற்றுக்கொடுத்ததை அடுத்து, மாநில கைத்தொழில் அமைச்சர் ஈ.பி.ஜெயராஜனின் மகன், கமிஷனாக ஒரு பெரிய தொகையைப் பெற்றதை பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தான் முதன்முதலாக வெளிப்படுத்தினார்.

சுரேந்திரன் நேற்று செய்தி வெளியிட்ட உடனேயே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் பினராயி விஜயனுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் இராஜதந்திர லக்கேஜ்களில் 17,000 கிலோகிராம் பேரீச்சம் பழம் வந்துள்ளதைக் கேட்டு ஆச்சரியப்படுவதாக சென்னிதாலா இன்று தெரிவித்தார்.

“இந்த பேரீச்சம் பழங்களைத் துணைத் தூதரகத்தில் உள்ள ஊழியர்கள் உட்கொண்டாலும், அவர்கள் பல ஆண்டுகளாக அவற்றை வைத்திருக்க முடியும். பேரீச்சம் பழம் என்ற போர்வையில் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்டது எல்லாம் மர்மமாக உள்ளது. அது கடத்தப்படும் தங்கமாகக் கூட இருக்கலாம். கேரள மாநில அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. எனவே ஒரு விரிவான விசாரணை இருக்க வேண்டும்” என ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

“பின்னர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரி விசாரிக்கப்பட்டார். முன்னர் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர் குறித்து பெருமிதம் கொண்ட நிலையில், இப்போது விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறி தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.” என்று சென்னிதலா கூறினார்..

Views: - 0

0

0