தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி..!!! – போர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்…

Author: Aarthi
8 October 2020, 1:53 pm
1 mukesh - updatenews360
Quick Share

அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

2ம் இடத்தில் உள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. 3ம் இடத்தை HCL நிறுவனர் சிவ நாடார் பிடித்துள்ளார்.

4ம் இடத்தில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ண தமானியும், 5ம் இடத்தை இந்துஜா சகோதரர்களும் பிடித்துள்ளனர்.

சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா 6ம் இடத்திலும், பல்லோன்ஜி மிஸ்திரி 7ம் இடத்திலும் உள்ளனர்.

8ம் இடத்தை உதய் கோடக் பிடித்துள்ளார். இவர் கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நிதி சார்ந்த பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா வங்கியை தொடங்கினார்.

9ம் இடத்தில் கோத்ரெஜ் குடும்பம் உள்ளது. அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆகியோரால் நிறுவப்பட்ட கோட்ரேஜ் குழுமம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் தயாரிப்புகள், தொழில்துறை பொறியியல், உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளை கொண்டுள்ளது.

10 இடத்தை லட்சுமி மித்தல் பிடித்துள்ளார்.

Views: - 80

0

0