அடுத்து முழு ஊரடங்கு தான்..? மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை..!

Author: Sekar
19 March 2021, 7:21 pm
maharashtra_lockdown_updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 25,833 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முழு ஊரடங்கு விதிப்பதும் அரசின் முன் உள்ள வாய்ப்புகளில் ஒன்றாக உள்ளது என்று கூறினார். எனினும் மக்கள் கொரோனா விதிமுறைகளை தாங்களாகவே பின்பற்றுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நந்தூர்பாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா நிலைமை மஹாராஷ்டிராவில் மிக மோசமாகிவிட்டது. நேற்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய மிக உயர்ந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என உத்தவ் தாக்கரே ஒப்புக்கொண்டார்.

“ஊரடங்கை அமல்படுத்தி முன்னோக்கி செல்வதையும் ஒரு விருப்பமாக நான் காண்கிறேன். ஆனால் மாநில மக்கள் ஒத்துழைப்பார்கள் மற்றும் கொரோனா விதிமுறைகளைத் தானாக முன்வந்து பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

“கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியபோது, வைரஸுடன் போராட எதுவும் இல்லை. ஆனால் இப்போது குறைந்த பட்சம் தடுப்பூசிகளை ஒரு கேடயமாக வைத்திருக்கிறோம். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே இப்போது முன்னுரிமை. தடுப்பூசி எடுக்க மக்கள் முன்வர வேண்டும்.” என்று அவர் கூறினார்.

தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்றார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் தொற்றுநோய் பரவிய சில சம்பவங்கள் உள்ளன. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று முதல்வர் கூறினார்.

Views: - 84

0

0