திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு சென்று திரும்பிய போது பரிதாபம் : கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி!!

26 December 2020, 3:40 pm
Accident 3 Dead -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்து ஊர் திரும்பி கொண்டுருந்த பக்தர்கள் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூத்தலபட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாகாலா மண்டலம் காதங்கி அருகே இன்று அதிகாலை காரும் லாரியும் நேருக்குநேர் பலத்த சத்தத்துடன் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் கர்நாடகா மாநிலம் நங்கிலியைச் சேர்ந்த பி.விஜயகுமார் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொற்க வாசல் தரிசனத்தில் பங்கேற்று மேலும் பல கோயில்களில் தரிசனம் செய்தனர்.

அவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சுப்ரமணியம் ராஜுவின் குடும்பமும் சேர்ந்து இரண்டு கார்களில் மொத்தம் பத்து பேர் சென்று மீண்டும் தரிசனத்திற்குப் பிறகு நங்கிலிக்கு காரில் சொந்த ஊர் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது பூத்தலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காதங்கி அருகே சித்தூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்த ஒரு லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் முன் இருக்கையில் இருந்த விஜயகுமாரின் மனைவி அன்னபூர்ணா (வயது 60), அவரது தாயார் ராஜம்மா (வயது 80), ஜோதி (வயது 14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை திருப்பதியில் உள்ள ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 1

0

0