இந்து பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்..! முஸ்லீம் இளைஞர்களுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி கோரிக்கை..!
26 November 2020, 5:14 pmஉத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியின் எம்பியான சமாஜ்வாதி கட்சியின் எம்பி எஸ்.டி.ஹசன், முஸ்லீம் இளைஞர்கள் இந்து பெண்களை தங்கள் சகோதரிகளாக கருது வேண்டும் என வலியுறுத்தியதோடு, உத்தரபிரதேச அரசு நிறைவேற்றிய புதிய லவ் ஜிகாத் அவசர சட்டத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்துவதற்கு உத்தரபிரதேச அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹசனின் கருத்துக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“லவ் ஜிகாத் ஒரு அரசியல் ஸ்டண்ட். நம் நாட்டில் தனிநபர்கள் தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. இந்துக்கள் முஸ்லீம்களை திருமணம் செய்கிறார்கள். முஸ்லீம்கள் இந்துக்களை திருமணம் செய்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளின் விவரங்களை நீங்கள் பெற்றால், திருமணம் மகிழ்ச்சியுடன் நடந்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் சில விஷயங்கள் தவறாக நடக்கின்றன. பின்னர் அவர்கள் மணமகனை முஸ்லீம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்து பெண்களை தங்கள் சகோதரிகளாக கருதுமாறு முஸ்லீம் இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், அவர்கள் அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்படலாம்.” என்று ஹசன் கூறினார்.
பாஜக தேர்தல் நெருங்கும் போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்குகிறது என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக செவ்வாயன்று, லவ் ஜிகாத் எனக் கூறப்படும் வழக்குகளை எதிர்கொள்ள சர்ச்சைக்குரிய லவ் ஜிகாத் அவசர சட்டத்தை உத்தரபிரதேச அமைச்சரவை நிறைவேற்றியது. புதிய சட்டத்தின் கீழ், திருமணங்களுக்காக பலவந்தமான மத மாற்றங்களைச் செய்த குற்றவாளிகள் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
மைனர் பெண்கள் அல்லது எஸ்சி / எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளன. நேற்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த உத்தரவை நிறைவேற்றியதற்காக யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை விமர்சனம் செய்ததோடு, வேலையின்மை மற்றும் இதுபோன்ற பிற சவால்களை அரசு கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், லவ் ஜிகாத் சட்டத்தை கொண்டுவருவதில் மாநில அரசு கவனம் செலுத்துவதாக கூறினார்.
லவ் ஜிகாத் என்பது சமூக அமைதியின்மையை உருவாக்க பாஜக உருவாக்கிய வார்த்தை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
0
0