ஆக்சிஜனுக்கு பதில் எல்.பி.ஜி சிலிண்டர் : ஆம்புலன்ஸ் வெடித்து சிதறிய விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2021, 8:52 pm
ஆந்திரா : திரவ ஆக்சிஜன் ஏற்ற வேண்டிய தனியார் ஆம்புலன்சில் எல்பிஜி சிலிண்டர் ஏற்றியதால் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி வாகனம் வெடித்து சிதறியது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் பொதட்டூரில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று தீ விபத்தில் சிக்கி வெடித்து சேதமடைந்தது.
அந்த ஆம்புலன்சில் எல்பிஜி சிலிண்டர் ஏற்றப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
Views: - 284
0
0