திருப்பதியில் ம.பி. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் சுவாமி தரிசனம் : சுந்தரகாண்ட பாராயணம் செய்து வழிபாடு..!!

18 November 2020, 12:35 pm
MP cm tirupati - updatenews360
Quick Share

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சுவாமி தரிசனம் செய்தார்.

ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று இரவு திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அவரை வரவேற்றார். திருமலையில் இரவு தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக, வளர்ச்சி பெறும் நாடாக முன்னேறி வருகிறது. எனவே, பிரதமர் மோடிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவேண்டுமென சுவாமியை வேண்டிக் கொண்டேன். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாடு மீண்டு சகஜ நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன்,” என அவர் தெரிவித்தார்.

பின்னர் உலக நன்மைக்காக ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்று சுந்தரகாண்ட பாராயணம் மேற்கொண்டார்.