“பெண்ணாக மட்டும் இல்லாமலிருந்தால்..”..! பெண் துணை ஆட்சியரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ..! வைரலாகும் வீடியோ..!

18 January 2021, 3:07 pm
Harsh_Gehlot_Threatens_Lady_SDM_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சாலியானா நகரில் நடந்த ஒரு டிராக்டர் பேரணிக்கு பின்னர் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் துணை ஆட்சியர் அந்தஸ்திலான ஒரு பெண் அரசு அதிகாரியை மிரட்டிய காட்சி வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை மிரட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹர்ஷ் கெலாட் என தகவல் வெளியாகியுள்ளது.

“நீங்கள் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணாக இல்லாதிருந்தால், நான் உங்கள் காலரை பிடித்து இழுத்து பின்னர் மெமோவை உங்களிடம் ஒப்படைத்திருப்பேன்.” என எம்.எல்.ஏ ஹர்ஷ் கெலாட் மிரட்டுவது வைரலாகும் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த காங்கிரஸ் ஒரு டிராக்டர் பேரணியை நடத்திய பின்னர் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

தகவல்களின்படி, ஹர்ஷ் தலைமையிலான ஒரு கூட்டம் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு குறிப்பை சமர்ப்பிக்க சென்றது. அப்போது அதிகாரி அலுவலகத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், வாக்குவாதம் ஏற்பட்டு, காங்கிரஸ் எம்எல்ஏ நேரடியாக மிரட்டியுள்ளார்.

Views: - 0

0

0