சம்பல் கொள்ளையர்களை அழித்த காவல்துறையின் சாகசத்தை காட்சிப்படுத்தும் மத்திய பிரதேச போலீசார்..!

31 January 2021, 6:39 pm
Terrorist_UpdateNews360
Quick Share

கொள்ளையடித்தலுக்கு பிரபலமான மத்திய பிரதேசத்தின் சம்பல் பிராந்தியத்தின் சில பயங்கரமான கொள்ளை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய எம்.பி. பூலான் தேவி, கொள்ளைக்காரர் மல்கன் சிங் மற்றும் தடகள வீரராக மாறிய பான் சிங் தோமர் ஆகியோர் அடங்கிய வாழ்க்கைக் கதைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக மாநில காவல்துறை ஊழியர்கள் நன்கொடை அளித்து வருவதாக பிந்த் போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.

“இதுவரை, சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்கள் புகழப்பட்டுள்ளனர். இப்போது, ​​அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடிய பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

“இந்த அருங்காட்சியகத்தில் சம்பலில் இருந்து கொள்ளையர்களை அகற்றுவதில் உயிரிழந்த 40’க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் தரவுத்தளம் இருக்கும். அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதக்கங்கள் காட்சிக்கு வைக்கப்படும்” என்று சம்பல் பகுதியின் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் ஹிங்கங்கர் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்த ஒரு ஆவணப்படமும் தயாரிக்கப்பட உள்ளது என அவர் மேலும் கூறினார்.

Views: - 30

0

0

1 thought on “சம்பல் கொள்ளையர்களை அழித்த காவல்துறையின் சாகசத்தை காட்சிப்படுத்தும் மத்திய பிரதேச போலீசார்..!

Comments are closed.