தினமும் 100 டன் ஆக்சிஜன் சப்ளை..! இந்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்..!

18 April 2021, 1:36 pm
medical_oxygen_updatenews360
Quick Share

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு 60 டன் மருத்துவ ஆக்ஸிஜனை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 100 டன் ஆக்ஸிஜனை இந்தூர் நகரத்திற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து ஒரு டேங்கர் நேற்று இரவு இந்தூருக்கு 60 டன் ஆக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தன் நகரின் தார் சாலையில் இரவு 10 மணியளவில் மத்திய பிரதேச அமைச்சர் துளசி சிலாவத் மற்றும் பாஜகவின் இந்தூர் தலைவர் கவுரவ் ராண்டிவ் ஆகியோர் டேங்கரை வரவேற்றனர்.

ஊடகங்களுடன் பேசிய சிலாவத், “ஆக்ஸிஜன் டேங்கர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனுப்பியுள்ளது. இது நகரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

“துன்ப நேரத்தில் எங்களுக்கு திரவ ஆக்ஸிஜனை வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இது 60 டன், மேலும் ஒவ்வொரு நாளும் நாங்கள் 100 டன் பெறுவோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

கவுரவ் ராண்டிவ் மேலும் மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர் நகரத்திற்கு ஒரு உயிர்நாடியாக வந்துள்ளது என்பதை வலியுறுத்தினார். இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேசியதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு இந்த டேங்கர் வந்தது.

டேங்கர் அலங்கரிக்கப்பட்டு, பாஜக தலைவர்களும் 60 டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்ட டேங்கரை பூஜை செய்து வரவேற்றனர். இது கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பயன்படும்.

Views: - 44

0

0