கொரோனாவில் இருந்து விடுபட்ட 100 வயது மூதாட்டிக்கு உற்சாக வரவேற்பு.!!

23 May 2020, 12:55 pm
Grandma - Updatenews360
Quick Share

மத்தியபிரதேசம் : கொரோனாவில் இருந்து விடுபட்ட 100 வயது மூதாட்டிக்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மெல்ல மெல்ல கொரோனவில் இருந்து குணமான சாந்தா பாய், முழுமையாக குணமடைந்ததால், அவரை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

வீட்டிற்கு வந்த அவருக்கு, குடும்பத்தினர் உறவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கொரோனாவில் இருந்து விடுபட்ட 100 வயது மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய உற்சாகத்தை மூதாட்டி அளித்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.