ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து… காட்டாற்றை கடக்கு முயன்ற போது சோகம் : 20 பேரின் கதி..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
28 September 2021, 5:10 pm
Quick Share

மகாராஷ்டிராவில் பாலத்தை கடக்க சென்ற பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை: யவத்மால் மாவட்டத்தின் உமர்க்ஹெது ஊரில் உள்ள ஒரு பாலத்திலிருந்து செல்லும் பேருந்து ஒன்று திடீரென ஆற்றில் அடித்துச்செல்லும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது . இந்த பேருந்தில் சுமார் 15 பேர் இருந்ததாக தகவல். யவத்மால் மாவட்டத்தில் பலத்த மழை பெய்துவருகின்றது அதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் உமர்க்ஹெது ஊரில் உள்ள பாலத்தில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடின.

அப்பொழுது அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று. அப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. இதுபோன்ற இயற்க்கை சீற்றங்கள் நிகழும்பொழுது மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் . அப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சற்று பொறுமையாக இருந்திருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம். பாலத்தையே மூழ்கடித்த மழைநீர்வெள்ளத்தின் ஆபத்தை பற்றி அறியாமல் பாலத்தை கடந்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட ஓட்டுனரால் ,பேருந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

அதே நேரத்தில், மக்கள் வேக வேகமாக பேருந்தில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். எனினும், பேருந்து மீட்கப்பட்டதா அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இதுவரை முறையாக வெளியிடப்படவில்லை.

Views: - 184

0

0