15 ஆண்டுகால போராட்டம்..! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..! ஒரு விவசாயியின் சோக முடிவு..!

26 November 2020, 6:17 pm
Suicide_UpdateNews360
Quick Share

அண்மையில் இயற்றப்பட்ட விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உழவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரு சோகமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு நிலத்தை மீண்டும் அளவிட, கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இறந்தவர், பாலி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான அர்ஜுன் சலுங்கே என அடையாளம் காணப்பட்டார். பீட் மாவட்டத்தின் பார்ஷி சாலையில் உள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தீக்குளித்தார். 

பின்னர் சிகிச்சைக்காக 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை அவரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சலுங்கேயின் 19 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று அரசு அதிகாரிகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
தற்கொலை செய்துகொண்ட தனது தந்தை கடந்த 15 ஆண்டுகளாக நிலப் பதிவுகள், நீர்ப்பாசனத் துறை மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை ஆகியவற்றுக்கு நடையாய் நடந்தும் எந்த பலனும் கிட்டவில்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

1962’ஆம் ஆண்டில், நீர்ப்பாசனத் துறை ஒரு விவசாய நிலத்திலிருந்து ஒரு பகுதி நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால் நீர்ப்பாசனத்துறை அதிகப்படியான நிலங்களை கையகப்படுத்தியதாக அவர் அஞ்சியுள்ளார்.

இதனால் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள, அரசு அதிகாரிகளிடம் 15 ஆண்டுகள் போராடியும் எதுவும் நடக்காததால்  விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 22

0

0