மிசா கைதிகளுக்கான பென்ஷன் திட்டம் ரத்து ..! காங்கிரஸ் அழுத்தத்திற்கு பணிந்தது உத்தவ் அரசு..!

1 August 2020, 11:00 am
prison_updatenews360
Quick Share

1975-1977 நாட்டில் அவசரகாலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் பதிவு செய்யப்பட்ட கைதிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது. கடந்த ​​ஜூலை 2018 முதல் அப்போதைய மாநில பாஜக அரசு திட்டத்தை தொடங்கியதிலிருந்து ஆண்டுக்கு ரூ 42 கோடியை பயனாளிகளுக்கு செலவிடுகிறது.

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த இந்த திட்டம் கைவிடப்பட்டதாக அரசாங்கத் தீர்மானம் தெரிவித்துள்ளது.

அவசரகாலத்தில் சிறைவாசம் பெற்றதற்கான ஓய்வூதியமாக பயனாளிகள் மாதம் ரூ 10,000 பெறுகின்றனர். காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​ஃபட்னாவிஸ் அரசாங்கம் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த கைதிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தது.

அவசர காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும். காங்கிரஸ் மூத்த தலைவரும் எரிசக்தி அமைச்சருமான நிதின் ராவத், கடந்த ஆண்டு நவம்பரில் மகா விகாஸ் அகாதி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் குழப்பம் விளைவிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் உத்தவ் அரசுடன் தொடர்ச்சியாக பேசி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளதால், காங்கிரசை சாந்தப்படுத்தவே இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

Views: - 8

0

0