“அண்ணா ஒரு லைட்ஸ் குடுங்க“ : இனிமே சிகரெட்ட இப்படி கேட்டு வாங்க முடியாது!!

27 September 2020, 4:54 pm
Beedi Cigarett- Updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் முதன் முறையாக பீடி, சிகரெட்டுகளை சில்லறையாக வாங்க தடை செய்யப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக புற்று நோய் குறித்து எச்சரிக்கும் புகைப்படங்கள் ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.

இந்த நிலையில் தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனித் தனியே விற்பனை செய்யாமல் இருந்தால் ஓரளவு இளைஞர்களிடம் பரவி வரும் புகைப்பழக்கம் குறையும் என புற்று நோய் நிபுணர் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனித்தனியே விற்பனை தடை செய்தால் முழு சிகரெட் பாக்கெட்டையும் வாங்குமளவு பொருளாதாரம் இல்லாததால், 16 வயது 17 வயதுடையவர்கள் புடிகைப்பிடிக்கும் பழக்கம் குறையும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே புகையிலை பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்ட போது புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்ததுள்ளதாக மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

அண்ணா ஒரு சிகரெட் கொடுங்க, 10 ரூபாய்க்கு பீடி கொடுங்க என கேட்பவர்களுக்கு இனி கிடைக்காது. வாங்கினால் மொத்தமாகத்தான் வாங்கிகொள்ள முடியும். இது மகாராஷ்டிராவில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 11

0

0