மகாராஷ்டிர அமைச்சர் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு..! மும்பை போலீசார் புகாரை ஏற்காததால் பாதிக்கப்பட்ட பெண் விரக்தி..!

13 January 2021, 10:41 am
NCP_Dhananjay_Munde_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மும்பை போலீசார் தனது புகாரை ஏற்க மறுப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

அதே நேரத்தில் புகார் அளித்தவர் மற்றும் அவரது சகோதரி தன்னை பிளாக் மெயில் செய்வதாகக் கூறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் மகாராஷ்டிர அமைச்சருமான தனஞ்செய் முண்டே கூறி, தன் மீதான புகார்களை நிராகரித்தார்.

முண்டே மேலும், புகார் அளித்தவரின் சகோதரியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு கொண்டிருந்ததாகவும், அவர் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றதாகவும் கூறினார்.

37 வயதான புகார்தாரர், ஜனவரி 10’ஆம் தேதி மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியதாகக் கூறினார். முண்டே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதில் குற்றம் சாட்டினார். முன்பு ஓஷிவாரா போலீஸை அணுகியதாகவும்,  ஆனால் தனது புகார் ஏற்கப்படவில்லை என்றும் அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தன்னை பிளாக்மெயில் செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.எனினும், தனக்கு திருமணம் ஆன நிலையிலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் உறவு கொண்டிருந்ததாகவும், அவருடன் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஒப்புக் கொண்டார்.

நேற்று வெளியிட்ட அறிக்கையில், முண்டே தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த உறவை அறிந்திருப்பதாகவும், இரண்டு குழந்தைகளையும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

அவர் மேலும் தன்னுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்த பெண், 2019 முதல் தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக ஒரு போலீஸ் புகார் அளித்ததாகவும், தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்புவதை தடுத்து நிறுத்தக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Views: - 11

0

0