போதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்..! 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..!

18 January 2021, 6:57 pm
Sameer_Khan_UpdateNews360
Quick Share

மும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு சமீர் கான் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு நாள் முழுவதும் நீடித்த விரிவான விசாரணையின் பின்னர் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அவரை ஜனவரி 13’ஆம் தேதி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்தது. அவரது என்சிபி ரிமாண்ட் இன்றுடன் முடிவடைகிறது.

சமீர் கான் மற்றும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கரண் சஜ்னானிக்கு இடையில் ஒரு ஆன்லைன் பணமாற்றத்தை நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து அவர் வரவழைக்கப்பட்டார். இது போதைப்பொருள்  வாங்குவதற்கான கட்டணம் என்று என்சிபி நம்புகிறது.

முன்னதாக கரண் சஜ்னானி மற்றும் இரண்டு பேர் கடந்த வாரம் 200 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

சஜ்னானியுடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு நபர்கள் ரஹிலா ஃபர்னிச்சர்வாலா மற்றும் அவரது சகோதரி ஷைஸ்டா ஃபர்னிச்சர்வாலா ஆவர். ரஹிலா ஃபர்னிச்சர்வாலா சமூக ஆர்வலரும் திரைப்பட நடிகையுமான தியா மிர்சாவின் முன்னாள் மேலாளர் ஆவார்.

இதற்கிடையே சமீர் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் வழக்கில் விசாரணையை என்சிபி தீவிரப்படுத்தியுள்ளது. மும்பையில் நேற்றிரவு முதல் என்.சி.பியின் பல குழுக்கள் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0