மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..! உத்தவ் தாக்கரே அரசு விளக்கம்..!

17 January 2021, 2:05 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 17-18 தேதிகளில் திட்டமிடப்படவில்லை என்றும் அவை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடரும் என்றும் மகாராஷ்டிரா சுகாதாரத் துறை இன்று தெளிவுபடுத்தியது.

கோ-வின் செயலியின் குறைபாடு காரணமாக இரண்டு நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தடுப்பூசி அமர்வுகள் இன்று மற்றும் நாளை திட்டமிடப்படவில்லை. எனவே ரத்து செய்வதற்கான கேள்வி எழவில்லை. கொரோனா தடுப்பூசி அமர்வுகள் அடுத்த வாரத்தில் மீண்டும் இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஏற்பாடு செய்யப்படும்” என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோ-வின் செயலியின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கொரோனா தடுப்பூசி ஜனவரி 18 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறியது குறிப்பிடத்தக்கது.

“கோ-வின் செயலியின் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக தடுப்பூசி பணிகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இது மத்திய அரசால் சரிசெய்யப்படுகிறது. எனவே, தடுப்பூசி ஜனவரி 17-18 வரை நிறுத்தப்படும். மேலும் ஆன்லைன் பதிவு தொடர்பான பிரச்சினைகளை மத்திய அரசு சரிசெய்த பின் மீண்டும் பணிகள் தொடங்கும்.” என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோ-வின் என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் டிஜிட்டல் தளமாகும். இது கொரோனா தடுப்பூசிக்கான அளவுகள், சேமிப்பு மற்றும் பயனாளிகளின் தனிப்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றின் தகவல்களை எளிதாக்கும். இந்த டிஜிட்டல் தளம் தடுப்பூசி அமர்வுகளை நடத்தும் அதிகாரிகளுக்கு அனைத்து மட்டங்களிலும் உதவும்.

கொரோனா தொற்றுநோய், தடுப்பூசி விநியோகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு தீர்வு காண ஒரு பிரத்யேக 24×7 அழைப்பு மையம் 1075 எனும் தொலைபேசி எண்ணில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0