அதிகாலை எழுந்து கேஸ் பற்ற வைத்த போது பயங்கரம்.! சிலிண்டர் வெடித்து சுவர் இடிந்து விழுந்து விபத்து.!!

9 August 2020, 4:34 pm
Pune GAs Blast - Updatenews360
Quick Share

மகாராஷ்டிரா : சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பரிதாபமாக உயரிழந்த நிலையில் 5 குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகயாமடைந்தவர்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அங்குள்ளவர்களை மீட்க வேண்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அங்குள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடத்தில் வசித்து வரும் மகிந்தரா என்பவரின் வீட்டில் உள்ள சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகியுள்ளது. இந்த கேஸ் காற்றில் கலந்து அடுத்தடுத்த வீடுகளில் பரவியுள்து.

அதிகாலை நடந்த இந்த விபத்தில், காலையில் வீட்டில் உள்ளவர்கள் அடுப்பை பற்ற வைக்கும் போது சிலிண்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.

Views: - 94

0

0