யாரையும் விரும்ப மாட்டோம் என உறுதிமொழி… காதலர் தினத்தில் பள்ளியில் நடந்த கூத்து இது!

14 February 2020, 11:20 pm
Mumbai school updatenews360
Quick Share

நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம் என்று, காதலர் தினத்தன்று மும்பை பள்ளியில் மாணவியரை உறுதிமொழி ஏற்கச்செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டு தோறும், பிப்ரவரி மாதம் 14 ஆம் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி பரிசு பரிமாறிக் கொள்வர். காதல் வலையில் சிக்கிய பல வாலிப – இளம் பெண்களும் காதலை தெரிவிப்பது, உல்லாசமாக வெளி இடங்களுக்கு சென்று மகிழ்வது என்று கொண்டாடுகின்றனர்.

ஆனால், பெண்கள் காதலில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, ‘நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என்று பள்ளியில் மாணவியரை  உறுதிமொழி எடுக்கச்சொன்ன சம்பவம் பெரும், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவின். அமராவதி பகுதியில், சிந்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் காதலர் தினமான பிப்ரவரி 14இல் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  இச்சம்பவம் மகாராஷ்டிராவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply