இது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறல் அல்ல..! ஃபாஸ்டேக் கட்டாயம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பாத்திரம் தாக்கல்..!

14 April 2021, 5:02 pm
Fastag_UpdateNews360
Quick Share

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்குவது எந்த வகையிலும் நடமாடும் சுதந்திரத்திற்கான குடிமகனின் அடிப்படை உரிமையை மீறாது என்று மத்திய அரசு மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் எனும் எலக்ட்ரானிக் டோல் வசூல் சிப்பை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு ஒன்றிற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு இதைத் தெரிவித்துள்ளது.

அர்ஜுன் கானாபுரே என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஃபாஸ்டாக் விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்து நடமாட்டத்தை உறுதி செய்வதற்கும், பயண நேரத்தை குறைப்பதற்கும், அனைத்து முடிவுகளும் மத்திய மோட்டார் வாகனங்கள் (சி.எம்.வி) விதிகளின்படி எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

“ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்துவதற்கான ஆணை ஒரு குடிமகனின் இயக்க சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதில்லை” என்று மேலும் மத்திய அரசின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வதைத் தடுக்கப்படுவதால், மேலும் இது கட்டாயமாக்கப்படுவது குடிமக்களின் நடமாடும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என மனுதாரர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த ஆண்டு பிப்ரவரி 14 தேதியிட்ட அறிவிப்பின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களில் அதை பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அந்த இடத்திலேயே ஃபாஸ்டேக்பொருத்துவது சாத்தியமில்லாத சந்தர்ப்பங்களில், வாகனம் ஃபாஸ்டேக் பாதைகளின் தீவிர இடதுபுறத்தில் நெடுஞ்சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், அத்தகைய வாகனங்கள் சுங்கவரி தொகையை விட இரண்டு மடங்கு செலுத்த வேண்டியிருந்தது.

வாகன நெடுஞ்சாலைக்கு வழிகாட்டவும், போக்குவரத்து நெரிசல்களைத் தடுக்கவும் அல்லது இதுபோன்ற வாகனங்கள் இருப்பதால் மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 6’ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பொதுநல மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசு நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

ஒரே இரவில் ஃபாஸ்டேக்கை கட்டாயமாக்கவில்லை என்றும், 2016 முதல் 2020 வரை பயனர்களுக்கு 10 முதல் 25 சதவீதம் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியதாகவும் அரசாங்கம் மேலும் கூறியது.

டிசம்பர் 1, 2017 க்குப் பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்க 2017’ஆம் ஆண்டில் சிஎம்வி விதிகளை திருத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2020’இல், 2021 ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்க சி.எம்.வி விதிகளை மேலும் திருத்தியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டாக் இல்லாமல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் இரட்டை பயனர் கட்டணம் அல்லது அபராதம் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008’இன் படி இது மேற்கொள்ளப்படுகிறது அரசாங்கம் கூறியது.

பொதுநல மனுவில் கூறப்பட்டதைப் போலன்றி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளை இணைப்பது ஃபாஸ்டேக்கை பெறுவதற்கு கட்டாயமில்லை என்றும் அது வாதிட்டது.

தற்போது, 119 மாநில டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் உள்ளது மற்றும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் ஃபாஸ்டாக் வாகனங்களுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு நிதி உதவி ஏற்பாடுகள் வழங்கப்பட்டு உள்ளன என்று அது தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி எஸ் குல்கர்னி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மாத இறுதியில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உள்ளது. 

Views: - 29

0

0