சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடினார் மலையப்பசுவாமி

15 January 2021, 9:27 pm
Quick Share

திருப்பதி: திருப்பதி மலையில் உள்ள பாரி வேட்டை மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்ற உற்சவத்தின் போது மலையப்பசுவாமி சம்பிரதாய முறையில் மான் வேட்டையாடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் காணும்பொங்கல் அன்று திருப்பதி மலையில் பாரிவேட்டை உற்சவம் என்ற பெயரில் மலையப்பசுவாமி வன விலங்குகளை வேட்டையாடும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இன்று நடைபெற்ற பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தை அடைந்தார்.
இங்கு மலையப்ப சுவாமிக்கு சிறப்பு சமர்ப்பணம் நடத்தப்பட்டன. தொடர்ந்து மலையப்பசுவாமி வன விலங்குகளை வேட்டையாடும் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர் மலையப்ப சுவாமி மூன்று முறை முன்னும் பின்னும் செல்ல ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் கையில் இருந்த வெள்ளி வேல் ஒன்றை மூன்று முறை பகுதியில் வீசி எறிந்தார்.

Views: - 4

0

0