மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மம்தா பானர்ஜி..! ஏழு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்..!

By: Sekar
12 March 2021, 8:25 pm
mamata_banarjee_discharge_updatenews360
Quick Share

நந்திகிராமில் பிரச்சாரத்தின்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மம்தா பானர்ஜி ஏழு நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

“முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்துவிட்டது. அவர் பலமுறை கோரியதால், அவர் பொருத்தமான அறிவுறுத்தல்களுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இடது கணுக்கால் வீக்கம் குறைந்துவிட்டது. மேலும் அவரது கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பில் வலி குறைவாக இருப்பதாக எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.


முன்னதாக, நந்திகிராம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறி, மார்ச் 10’ஆம் தேதி மம்தா பானர்ஜி காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். நந்திகிராம் தொகுதியில் தனது முன்னாள் வலதுகரமாக விளங்கிய சுவேந்து அதிகாரியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை என்று நேரில் பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், அனுதாப அரசியலுக்காக திரிணாமுல் கட்சியினர் நாடகமாடுவதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், மருத்துவர்கள் 7 நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

Views: - 48

0

0