பெங்களூருக்கு காரில் துப்பாக்கியுடன் சென்ற நபர் கைது

17 November 2020, 9:49 pm
Quick Share

திருப்பதி: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு காரில் துப்பாக்கியுடன் சென்ற நபரை போலீசார் கைது செய்து, 2 துப்பாக்கிகள், 29 தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தாலுகா போலீசார் இன்று வேம்பள்ளி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதனப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரில் இருந்த 9 எம்.எம். துப்பாக்கிகள் இரண்டு, 29 தோட்டாக்கள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த சதும் கிராமத்தை சேர்ந்த பரூக் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பரூக்கின் சகோதரர் துபாயில் இருப்பதாகவும், அவர் கூறியபடி மும்பையில் ஓலோ கார் ஓட்டுனராக இருந்த நான் கடந்த வாரம் மும்பையில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 29 தோட்டக்கள் ஆகியவற்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து இருந்தேன் என்றும், மீண்டும் சமியுள்ள கூறியதன் பேரில் பெங்களூரில் ஒருவரிடம் கொடுப்பதற்காக அவற்றை கொண்டு செல்வதாகவும் பரூக் தெரிவித்தார் என்று டி.எஸ்.பி. ரவி மனோகராச்சாரி தெரிவித்தார்.

ஆனால் மும்பையில் கார் டிரைவராக இருந்த பரூக் துப்பாக்கிகள்,தோட்டாக்கள் ஆகியவற்றை வாங்கி தீவிரவாதிகள் கொடுப்பதற்காகவோ அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காகவோ கொண்டு சென்றாரா அல்லது துபாயில் இருந்து சமியுள்ள தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளை பரூக் மூலம் மும்பையிலிருந்து அனுப்பி சப்ளை செய்கிறாரா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0