கொரோனா குற்றங்கள் – வீட்டை விட்டு வெளியே சென்று பால் வாங்கியவருக்கு நடந்த விபரீதம்…!

26 March 2020, 2:29 pm
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பிணங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க பிரதமர் மோடி இந்திய மக்களை அடுத்த 21 நாட்களுக்கு ஊடரங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விதியினை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என்று பல மாநிலங்கள் அறிவித்திருந்தது.


பெங்கால் மாநிலம் ஹௌராப் பகுதியில் தனது வீட்டில் வாழ்ந்து வருபவர் லால் சுவாமி. இந்த ஊடரங்கினால் நேற்றுவரை வீட்டிலிருந்த அவர் இன்று காலை பால் வாங்குவதற்காக பக்கத்துக்கு தெருவிற்கு தனியாக சென்றுள்ளார். போன கணவன் இன்னும் வீடுத் திரும்பவில்லையென்று கதவைத் திறந்து வெளியே வீதியில் பார்த்தபொழுது அவர் போலீஸ் அதிகாரிகளிடம் அடிவாங்குவதை கண்டார்.


உடனே அவர் விரைந்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசி உண்மையை சொல்லி படுகாயத்துடன் மயங்கி விழுந்த அவரது கணவனை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபொழுது வருவழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் அப்பெண் போலீஸ் அதிகாரிகள் மேல் கோபமுற்று அவருக்கான நீதியை கேட்டுவருகின்றார்.

Leave a Reply