கல்யாணம் பண்ணுங்க.. விஷம் குடித்த காதலியை மருத்துவமனையில் மணமுடித்த காதலன்..! அப்புறம் ஆள் எஸ்கேப்!

6 December 2019, 4:17 pm
Quick Share

புனே: மகாராஷ்டிராவில் ஐசியூ வார்டில் காதலித்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர் அடுத்த சில மணி நேரங்களில் தலைமறைவாகி இருக்கிறார்.

சூரஜ் நலவாடே என்ற அந்த இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறார். அந்த பெண்ணும் இவரை விரும்பி இருக்கிறார்.

இருவரும் சினிமாவில் வருவது போல காதல் வானில் எக்கச்சக்கமாக பறக்க ஆரம்பித்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் உடல் ரீதியான உறவுகளும் இருந்திருக்கின்றன.

நாட்கள், நகர, நகர திருமணம் என்று வாய் திறந்திருக்கிறார் அந்த பெண். லேசாக ஜெர்க்கான அந்த இளைஞர் மழுப்ப ஆரம்பித்து இருக்கிறார்.

பெண் மேலும் நெருக்கடி கொடுக்க திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்திருக்கிறார். நாட்கள் நகர்ந்தன. ஆனால் திருமணம் கைகூடவில்லை.

அதிர்ச்சி அடைந்த பெண் விஷத்தை அருந்திவிட்டார்.  மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவர் சேர்க்கப்பட்டார். ஒரு வழியாக, காதலர் திருமணத்துக்கு சம்மதிக்க மருத்துவமனையிலேயே கல்யாணமும் நடந்திருக்கிறது.

தாலி கட்டி, மாலை மாற்றிய கையோடு மருத்துவமனையை விட்டு எஸ்ஸான அந்த இளைஞர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் சிகிச்சை போய் கொண்டிருக்க மறுபக்கம் போலிசில் இதை புகாராக பதிவு செய்திருக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த பெண்.

தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள் என்பதால் திருமணம் செய்ய தமது காதலர் மறுப்பதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார். போலிசாரும் ஐபிசி 176வது பிரிவின்கீழ் (பாலியல் பலாத்காரம்) வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடந்து வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.