டெல்லியில் பிரபல ஓட்டலில் நடந்த சம்பவம்…! சாம்பாரில் பல்லி..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
3 August 2020, 11:48 amடெல்லி: பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய டெல்லியின் கனாட் பிளேசில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் தென்னிந்திய உணவை ஆர்டர் செய்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட சாம்பாரில் இறந்த பல்லியின் உடலைக் கண்டு அதிர்ந்தார்.
இது குறித்த வீடியோவை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட வைரலாகியது. வீடியோவில், ஓட்டலில் உள்ள உணவக ஊழியர்கள் இருப்பது தெரிகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வாடிக்கையாளர் புகார் அளித்தார். ஐபிசி மற்றும் ஐபிசி 336 இன் பிரிவு 269 ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உணவகத்தின் ஊழியர்கள், சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இந்த பகுதியில் உள்ள அந்த ஓட்டல் மிகவும் பிரபலமான ஒன்று. எப்போதும் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிவர். இப்போது சாம்பாரில் பல்லி கிடந்துள்ள சம்பவம், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.