காற்றில் புல்லாங்குழலை சுழற்றினால் இன்னிசை! வீடியோ செம ஹிட்

3 March 2021, 8:09 am
Quick Share

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 42 வயதான நபர், தனது கையில் இருக்கும், மூங்கில் புல்லாங்குழலை காற்றில் சுழற்றிய போது, இன்னிசை உருவாக, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும் இந்த அதிசயத்தை கண்டு வாய் பிளந்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த மணிராம் மண்டாவி (வயது 42). இவர் தான் அந்த வைரல் மனிதர். ‘பீப்புள் அர்சிவ் ஆப் ரூரல் இந்தியா’ அவரது வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளது. மணிராம், தனது கையில் இருக்கும் மூங்கில் புல்லாங்குழலை, காற்றில் வேகமாக அசைக்க, அதிலிருந்து இசை பிறக்கிறது.

‘ஸ்விங்கிங் புல்லாங்குழல்’ எனப்படும் இந்த சுவாரஸ்யமான இசைக்கருவி மூங்கிலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. 80 வயதான தனது ஆசிரியர் மந்தர் சிங் மண்டாவியிடம் இருந்து, இந்த திறமையை, தனது 15 வயதில் கற்றுக் கொண்டதாக மணிராம் தெரிவித்துள்ளார்.

காடுகளில், சிங்கங்கள், புலிகள் மற்றும் கரடிகள் போன்ற காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பிற்காக, ஸ்விங்கிங் புல்லாங்குழல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை மந்தர் மணிராமிடம் தெரிவித்திருந்தார். டுவிட்டரில் இந்த வீடியோ இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டிருக்கிறது. 2,300க்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 780க்கும் அதிகமானோர் ரீடுவிட் செய்துள்ளனர்.

அமிதாப் என்ற பயனர், சுமார் 50 ஸ்விங்கிங் புல்லாங்குழல்களை வாங்கியதாகவும், அவற்றை அலங்கார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும் பதிவிட்டிருக்கிறார். பலரும் மணிராமின் திறமையை பாராட்டி கமெண்ட் செய்து, இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர்.

Views: - 1

0

0