இந்தியர் போட்ட ஒரே ஒரு பதிவு..! ட்விட்டரில் டிரெண்டாகும் #JoeBidenIsNotMyPresident..! காரணம் என்ன தெரியுமா..?

22 January 2021, 6:42 pm
Joe_Biden_is_not_my_president_UpdateNews360
Quick Share

ஜோ பிடன் ஜனவரி 20’ஆம் தேதி அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை கடைசி நிமிடம் வரை நிராகரித்து, எதிர்ப்பு தெரிவித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் தற்போது, #JoeBidenIsNotMyPreisdent எனும் ஹாஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹாஸ்டேக் பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் பிரயாக் திவாரி என்ற இந்தியர் தான் இதற்கான காரணம் என்பது வியப்பூட்டியது. பதவியேற்பதற்கு சற்று முன்னதாக ஜோ பிடென், “இது அமெரிக்காவில் ஒரு புதிய நாள்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு ட்விட்டர் பயனர் பிரயாக் திவாரி, “ஜோ பிடன் எனது ஜனாதிபதி அல்ல” என்று பதிலளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஒரு ட்விட்டர் பயனர், திவாரியை டிரம்ப் ஆதரவாளரா என்று அவரிடம் கேட்டபோது, திவாரி வெறுமனே, “இல்லை நான் இந்தியாவைச் சேர்ந்தவன்” என்று கூறினார்.

உரையாடலைப் பாருங்கள்:

திவாரியின் பதில் ட்விட்டரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது, #JoeBidenIsNotMyPreisdent என ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கியது.

ஒரு ட்விட்டர் பயனர், “#JoeBidenIsNotMyPresident தவறான காரணங்களுக்காக டிரெண்டாகியுள்ளது. இதற்காக பிரயாக் திவாரிக்கு நன்றி.” எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனர், “#JoeBidenIsNotMyPresident எனது ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அவர் ஜனவரி 26’ஆம் தேதி கொடியை ஏற்றுவார்.” எனக் கூறினார்.

மேலும் ஒருவர், “#JoeBidenIsNotMyPresident ஹாஹாஹா, எனது ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்” என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “இந்த நபர் உலகத்தை சிரிக்க வைத்தார்” என்று கூறி பிரயாக் திவாரியின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

Views: - 0

0

0