பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு : பதை பதைக்க வைத்த காட்சி!!

5 November 2020, 11:10 am
Chain Snatch - Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : நொய்டாவில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரேதேச மாநிலம் நொய்டாவில் தள்ளுவண்டி கடையில் ஒருவர் பழங்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பழம் வாங்க பெண் ஒருவர் வந்தார், அப்போது அந்த பெண் அருகே பழம் வாங்குவதை போல வந்த நபர் திடீரென் பெண் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு ஒடினான்.

ஆனால் செயின் கீழே விழு, சுதாரித்துக் கொண்ட பெண் செயினை எடுக்க முற்பட்ட போது, அந்த நபருடன் வந்த மற்றொரு நபர் கத்தியை காட்டி மிரட்டியதால் நிலை தடுமாறி பெண் கீழே விழுந்தார்.

இதையடுத்து செயினை எடுத்துக் கொண்டு கொள்ளையர் தப்பிச்சென்றனர். இது தொடர்பான காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 15

0

0