வயசு 12 தான்…! இவரு எழுதப்போறது 10ம் வகுப்பு தேர்வு! இது மணிப்பூர் மாணவரின் கதை

3 December 2019, 12:58 pm
Quick Share

இம்ப்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 12 வயது மாணவர் 10ம் வகுப்பு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக, கல்வித்துறையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டுமானால் 15 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அதில் வித்தியாசமாக, மணிப்பூரில் 12வயது மாணவர் 10ம் வகுப்பு தேர்வெழுத போகிறார்.

அவரது பெயர் ஐசக் பால் அலுங்குமான். அவரது அறிவாற்றலால் (ஐக்யூ சோதனை) இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது மணிப்பூர் மாநில கல்வித்துறை. பிறந்த தேதியை சிறப்பு பிரிவில் சேர்த்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து ஐசக்பால் கூறியிருப்பதாவது: எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சர் ஐசக் நியூட்டன் போன்று இருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார்.

அவரது தந்தையும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். அரசுக்கு நாங்கள் ரொம்ப நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்து வரக்கூடிய திறமையான இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் முன்னேற முன் உதாரணமாக இருக்கும் என்றார்.

10ம் வகுப்பு தேர்வெழுத அந்த மாணவர் விண்ணபித்த போது, கல்வித்துறையானது பல சோதனைகளை நடத்தியது. ஐக்யூவில் அவர் 141 புள்ளிகளை பெற்றிருக்கிறார். இது அதிகப்படியான நினைவாற்றல் ஆகும்.

1 thought on “வயசு 12 தான்…! இவரு எழுதப்போறது 10ம் வகுப்பு தேர்வு! இது மணிப்பூர் மாணவரின் கதை

Comments are closed.