இந்தியாவில் அதிகரிக்கும் பெண் குழந்தைகள் தத்தெடுப்பு..! தத்தெடுப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா..!

1 November 2020, 2:18 pm
Children_UpdateNews360
Quick Share

மார்ச் 31’ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில் இந்தியாவில் 2,061 சிறுமிகள் உட்பட மொத்தம் 3,531 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக எண்ணிக்கையிலான தத்தெடுப்புகள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர் தத்தெடுப்பு வள ஆணையத்தின் (காரா) தரவுகளின்படி, ஏப்ரல் 1, 2019 முதல் 2020 மார்ச் 31 வரை 1,470 சிறுவர்களும் 2,061 சிறுமிகளும் தத்தெடுக்கப்பட்டனர். நாட்டில் அனைத்து விதமான கலாச்சாரங்களிலும் பரவலாக ஆன் குழந்தை மீதான விருப்பம் அதிகம் உள்ள சூழலில், தற்போது மக்களின் மனநிலை மாறி வருவதை இந்த தத்தெடுப்பு தரவுகள் காட்டுகிறது.

“நாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மூன்று தேர்வுகளை வழங்குகிறோம். ஒருவர் ஒரு பெண் அல்லது ஆண் குழந்தையை தேர்வு செய்யலாம் அல்லது எந்த விருப்பத்தையும் வழங்காமல் கூட இருக்கலாம். ஆனால் பலர் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறார்கள்.” என்று ஒரு அதிகாரி கூறினார்.

தரவுகளின்படி, 0-5 வயதுக்குட்பட்ட 3,120 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 5-18 வயதுக்குட்பட்டவர்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 411 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர்.

பெரும்பாலான பெற்றோர்கள் இன்னும் இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவதால் வயதான குழந்தைகளைத் தத்தெடுப்பது ஒரு பிரச்சினையாகத் தொடர்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நாட்டிற்குள், 3,110 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. 2019-20 ஆம் ஆண்டில் 421 குழந்தைகள் வெளிநாட்டினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மகாராஷ்டிராவிலிருந்து 615 ஆகவும், கர்நாடகா 272 ஆகவும், தமிழகம் 271 ஆகவும், உத்தரப்பிரதேசம் 261 ஆகவும், ஒடிசா 251 ஆகவும் உள்ளது.

எனினும் 2019-20’ஆம் ஆண்டில் தத்தெடுப்புகளின் எண்ணிக்கை 2018-19’ஆம் ஆண்டில் 3,745 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டதை விட சற்று குறைவாக உள்ளது.

மேற்கண்ட தரவு அனாதை, கைவிடப்பட்ட மற்றும் சரணடைந்த குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பானது மற்றும் உறவினர்களிடமிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும் வளர்ப்பு குழந்தைகளையும் இதில் குறிப்பிடவில்லை.

Views: - 44

0

0

1 thought on “இந்தியாவில் அதிகரிக்கும் பெண் குழந்தைகள் தத்தெடுப்பு..! தத்தெடுப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா..!

Comments are closed.