தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்..! ராமர் கோவில் பூமி பூஜை குறித்து பிரியங்கா காந்தி கருத்து..!

4 August 2020, 5:32 pm
priynaka_gandhi_Updatenews360
Quick Share

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு, இந்த விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும் என்று நம்புவதாகக் கூறினார்.

“அயோத்தியில் ராமர் கோவிலின் அற்புதமான விழா ஆகஸ்ட் 5’ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறும் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து பெரிதாக எந்த கருத்தும் வராத நிலையில், பூமி பூஜையின் ஒரு நாள் முன்பு பிரியங்கா காந்தியின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா ராமரின் செய்தியையும் ஆசீர்வாதத்தையும் பரப்புகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் மேலும் கூறினார்.

“எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.” என பிரியங்கா மேலும் கூறினார்.

“ராமாயணம் உலக கலாச்சாரம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் மீது ஆழமான மற்றும் அழியாத அடையாளத்தை வைத்துள்ளது. இறைவன் ராமர், தாய் சீதா மற்றும் ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சார மற்றும் சமூக நினைவுகளில் ஒளிரும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாகநேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆகஸ்ட் 5’ஆம் தேதி நடக்கும் பூமி பூஜை விழாவை ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். தற்போதைய சூழல் எந்தவொரு நல்ல வேலையையும் தொடங்குவதற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று விவரித்திருந்தார்.

அதே நேரத்தில் அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை நிகழ்வை தான் எதிர்க்கவில்லை என்றும் அது நடக்கும் நேரத்தை மட்டுமே தான் எதிர்ப்பதாக திக் விஜய் சிங் மேலும் தெளிவுபடுத்தினார்.

Views: - 1

0

0