கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கான போரில், இந்தியாவுக்காக அயராது உழைக்கும் ஹீரோக்களை சந்திக்கவும்…

2 May 2021, 5:17 pm
Quick Share

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு, இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் ஓய்வு இல்லாது தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஹீரோக்களாக திகழும் இவர்கள், கொரோனாவுக்கு எதிரான போரில், அசாதாரண நடவடிக்கைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

சுகாதார உணவு முற்றிலும் இலவசமாக…

https://im.indiatimes.in/photogallery/2021/Apr/1ShubhalShah_608a9eaf36e59.jpg?w=750&h=563&cc=1

2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21 ஆம் தேதி, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த சுப்லால் ஷா, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு, சுகாதாரமான உணவை, முற்றிலும் இலவசமாக தந்து உதவுகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும், உங்கள் தனிமைக்காலம் முழுவதும் சுகாதாரமான உணவை முற்றிலும் இலவசமாக தந்து உதவுகிறோம். இவர் தனது போட்டோ, முகவரி உள்ளிட்ட விபரங்களை, பொதுவெளியில் எக்காரணமும் தெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

முழு சம்பளத்தையும் வழங்கிய நண்பர்

https://im.indiatimes.in/photogallery/2021/Apr/2drsnehilmishra_608a9f0d728e9.jpg?w=750&h=562&cc=1

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு, காய்கறி கடைக்காரரின் மகன், தனது முழு சம்பளத்தையும் வழங்கி உள்ளார். டாக்டர் நேஹில் மிஸ்ராவுக்கு, அவர் அனுப்பியுள்ள வாட்ஸ்அப் பதிவில், இந்த தகவலை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ரூ.1க்கு ஆக்சிஜனை நிரப்பி தரும் வள்ளல்

https://im.indiatimes.in/photogallery/2021/Apr/3ians-representational-image_608a9f6453bd4.jpg?w=750&h=563&cc=1

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு உதவும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தொழிலதிபர் மனோஜ் குப்தா, ரூ. 1 க்கு ஆக்சிஜன் சிலிண்டரை ரீபில் செய்து தருகிறார். எனது ஆலையில், நாள் ஒன்றுக்கு 1000 சிலிண்டர்கள் ரீபில் செய்யும் திறன் உடையதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

துணி மாஸ்க்களை இலவசமாக வழங்கும் தம்பதி

https://im.indiatimes.in/photogallery/2021/Apr/7india-today_608aa013eb584.jpg?w=750&h=562&cc=1

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கருணாகரன் மற்றும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றும் அவரது மனைவி சந்திரா, கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில், துணியிலான மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

பிரசவ காலத்திலும் சேவை

https://im.indiatimes.in/photogallery/2021/Apr/4twitter_608a9f8d1325c.jpg?w=750&h=562&cc=1

சட்டீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா சரக டிஎஸ்பியாக உள்ள சில்பா சாஹூ கர்ப்பிணியாக உள்ள நிலையில்,சாலையில் நின்றவாறு, கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்
இதுபோன்ற கொரோனா ஹீரோக்களை நாம் பாராட்ட எப்போதும் தவறக் கூடாது.

Views: - 67

0

0

Leave a Reply