தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாது அணையை பற்றி யோசிக்காதீங்க : கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் பளார்..!!

Author: Babu Lakshmanan
27 September 2021, 9:35 pm
Quick Share

டெல்லி : தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அனுமதியில்லாமல் மேகதாது அணை விவகாரத்தை பற்றி பேச வேண்டாம் என்று கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலத்தின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், செப்டம்பர் 23ம் தேதி வரை வரை 37.3 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும்,
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை என்றும் புகார் தெரிவித்தது. அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு சாதமாக அமைந்துள்ளது.

Views: - 126

0

0