சிறுமி பலாத்கார வழக்கு : முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!!

Author: Babu Lakshmanan
25 August 2021, 12:50 pm
Quick Share

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மேகாலயா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் தேசிய பழங்குடியினர்‌ விடுதலை கவுன்சில்‌ என்னும் அமைப்பின் தலைவர் ஜூலியஸ்‌ டார்பாங்‌. இவர்‌ மீது கடந்த 2007ம்‌ ஆண்டு சிறுமி ஒருவர்‌ பாலியல்‌ பலாத்கார
புகார்‌ அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர்‌.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
அப்போது, வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தின்‌ நீதிபதி எப்‌.எஸ்‌.சங்மா, ஜூலியஸ்‌
டார்பாங்கின்‌ குற்றம்‌ நிரூபிக்கப்பட்டதால்‌ அவருக்கு 25 ஆண்டு கால சிறைத்‌ தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்‌.

முன்‌ பலாத்கார வழக்கு நடந்த போதே சட்டசபை தேர்தலில்‌ ஜூலியஸ்‌ டார்பாங்‌
பட்ஸ்‌ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 471

0

0