மெஹபூபா முப்தியின் தேச விரோத கருத்துக்கு எதிர்ப்பு..! முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகல்..!

26 October 2020, 5:43 pm
mehaboobaa_mufti_updatenews360
Quick Share

இந்தியக் கொடி மற்றும் 370’வது பிரிவு குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய சில நாட்களுக்குப் பிறகு, மூன்று முக்கியத் தலைவர்கள் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறினர். பிடிபி தலைவர்கள் டி.எஸ்.பஜ்வா, வேத் மகாஜன், ஹுசைன் ஏ வாஃபா ஆகியோர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் திரும்பப் பெறப்படும் வரை தேர்தலில் போட்டியிடவோ அல்லது மூவர்ணத்தை ஏற்றுவதற்கோ விருப்பமில்லை என்று பிடிபி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முப்தி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முந்தைய மாநிலத்தின் தனிக் கொடி மீட்டெடுக்கப்பட்டால்தான், தான் மூவர்ணக் கொடியை ஏற்றுவேன் என்று மெஹபூபா முப்தி கூறினார்.

இதையடுத்து சனிக்கிழமையன்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக போராடும் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி, ஸ்ரீநகரில் சந்தித்து தேசிய மாநாட்டுத் தலைவர் பாரூக் அப்துல்லாவை அதன் தலைவராகவும், மெஹபூபா முப்தியை அதன் துணைத் தலைவராகவும் நியமித்தது.

ஏழு கட்சி கூட்டணியின் நோக்கம் பாஜக எதிர்ப்பு மட்டுமே என்றும், இது தேச விரோத குழு அல்ல என்றும் பாரூக் அப்துல்லா அப்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று மெஹபூபா முப்தியின் கருத்தால் அதிருப்தியடைந்துள்ள பிடிபி கட்சியின் மூன்று முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

கட்சித் தலைவர் மெஹபூபா முப்திக்கு எழுதிய கடிதத்தில், “மெஹபூபா முப்தியின் சில செயல்கள் மற்றும் விரும்பத்தகாத சொற்கள் குறித்து தாங்கள் மிகவும் சங்கடமாக உணவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேசபக்தி உணர்வுகளை புண்படுத்துகிறார்.” என்று அவர்கள் கூறினர்.

Views: - 17

0

0