சீனாவின் அத்துமீறலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி : முப்படைகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை..!

11 September 2020, 1:01 pm
Quick Share

சீனாவின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. சமீபத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம், இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியது.

பதில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தை விரட்டியடித்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், அத்துமீறுவதை சீனா நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேறிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

மட்டும் இன்றி இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு வைர்த்தை நடத்தியபோது, சீன ராணுவம் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சீனா ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், சீனாவை விட பலமடங்கு திறன் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இந்திய விமான படையில் முறையாக இணைக்கப்பட்டது. இதனையடுத்து, எல்லையில் சீனா அத்துமீறுவதை தடுக்க முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை

அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Views: - 0

0

0