கார்கில் போர் வெற்றி தினம் : ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை..!!!

Author: Babu
26 July 2021, 11:25 am
rajnath singh - updatenews360
Quick Share

டெல்லியில் உள்ள போர் வீரர்களின் நினைவித்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கடந்த 1999ம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து இந்திய ராணுவம் கடுமையாக போரிட்டது. ‘ஆபரேசன் விஜய்’ என்னும் பெயரில் நடந்த இந்தப் போர் சுமார் 3 மாதங்கள் நீடித்தது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விரட்டியடித்து இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்திய ராணுவ வீரர்களும் 500க்கும் மேற்பட்டோர் வீரமரணமடைந்தனர்.

மேலும், ஆபரேஷன் விஜய் போரில் வெற்றி பெற்றதாக 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 22-வது கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Views: - 191

0

0