திருப்பதியில் பாதயாத்திரை மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார்! ஜாபாலி அனுமன் கோவிலில் தரிசனம்!!

19 November 2020, 6:20 pm
Minister Tirupati Yatra - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக நடைபாதையில் வந்த அமைச்சர் உதயகுமார் திருமலையில் உள்ள ஜாபாலி அனுமார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திருமலையை வந்தடைந்தார்.

திருமலையில் உள்ள ஜாபாலி அனுமன் கோவிலில் தரிசனம் செய்து கொண்ட அமைச்சர் உதயகுமார் நாளை காலை ஏழுமலையானை சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க உள்ளார்.

Views: - 21

0

0