பாலியல் பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை… கம்பெனி மேலாளரின் சதி வலைக்கு சிக்கிய 15 வயது சிறுமி..!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 12:45 pm
Quick Share

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்த சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது.

டெல்லியில் செருப்பு தொழிற்சாலையின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெய் பிரகாஷ் (31). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை கவனித்துக கொள்ள வருமாறு, தான் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 15 வயது சிறுமியிடம் கேட்டுள்ளார். அவரும், இரக்க குணத்துடன் அதனை ஏற்று அவரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் சிறுமியை தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மேலளார் ஜெய் பிரகாஷ். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை நிறுத்திய பிரகாஷ், அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்துள்ளார். இதனால், சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில் கற்பழிப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Views: - 607

0

0