பாலில் மயக்க மருந்து கொடுத்த பல நாள் பாலியல்.! சிறுமியின் உயிரை பறித்த அரக்கன்கள்!

13 August 2020, 5:58 pm
Child Raped - Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஆதரவற்றோர் விடுதிகளில் தங்கியிருந்த சிறுமிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. தனியாரால் நடத்தப்படும் இந்த விடுதியில் ஏராளமான அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்படுகின்றனர்.

இந்த விடுதியை விஜயா என்ற பெண் விடுதியை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அங்கு அடிக்கடி வந்து செல்லும் வேணுகோபால் என்பவர் விஜயா மற்றும் அங்கு வேலை செய்யும் மற்றொரு நபர் ஆகியோர் உதவியுடன் அங்கு இருக்கும் சிறுமி ஒருவர் மீது கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

தாய் தந்தையை இழந்த அந்த சிறுமியை பாலியல் கொடுமையால் நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து விடுதி நிர்வாகம் சிறுமியை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக மரணமடைந்துவிட்டார்.

இந்தநிலையில் சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேணுகோபால், விடுதி நிர்வாகி விஜய்யா ஆகியோர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 2

0

0