ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த மிஸ் இந்தியா அழகி மான்சி சேகல்..!

1 March 2021, 1:51 pm
mans_isehgal_updatenews360
Quick Share

மிஸ் இந்தியா டெல்லி 2019 போட்டியில் பட்டம் வென்ற மான்சி சேகல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். கட்சித் தலைவர் ராகவ் சாதா முன்னிலையில் இன்று மான்சி சேகல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். 

உத்தரபிரதேசம் உட்பட அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வரும் நிலையில் மிஸ் இந்தியாவின் இணைப்பு கட்சிக்கு வலு சேர்க்கும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் நம்புகின்றனர்.

ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சிப் பணிகள் மான்சி சேகலை ஆம் ஆத்மி கட்சியில் சேரத் தூண்டின என்று ராகவ் சாதா கூறினார்.

மான்சி சேகல் துவாரகாவின் டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். பின்னர் நேதாஜி சுபாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து பி.டெக் பட்டம் பெற்றார்.

எஃப்.பி.பி கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா டெல்லி 2019 ஆடிஷனில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சேகல் ஒரு சேவை செய்யும் நபராக மாற விரும்புவதாகக் கூறியிருந்தார். அவர் தற்போது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0