மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..!

7 March 2021, 2:39 pm
Mithun_Chakraborty_UpdateNews360
Quick Share

மேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின் போது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுவேந்து ஆதிகாரி ஆகியோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று பாஜகாவில் மிதுன் சக்ரவர்த்தி இணைவதாக ஊகங்கள் வெளியான நிலையில், விஜயவர்கியா, “நான் மிதுன் சக்ரவர்த்தியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர் இன்று வரப்போகிறார். அவருடன் முழுமையான உரையாடல் முடிந்த பிறகு தான் மேற்கொண்டு எதுவும் கூற முடியும்.” எனக் கூறியிருந்தார்.

70 வயதான மிதுன் சக்ரவர்த்தி திரிணாமுல் கட்சியின் சார்பாக ராஜ்யசபை எம்பியாக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரதமர் மோடியின் பேரணியில் மிதுன் சக்ரவர்த்தியின் பங்கேற்பு மெகா நிகழ்ச்சிக்கு பாஜக ஆதரவாளர்களிடையே கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. மிதுன் சக்ரவர்த்தி நேற்று மாலை இங்கு வந்த பிறகு விஜயவர்கியாவை சந்தித்தார்.

இந்த பேரணியில் மிதுன் சக்ரவர்த்தி பங்கேற்பார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவதாக மாநிலம் முழுவதிலுமிருந்து சந்திப்பு மைதானத்திற்கு சென்ற பல பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மார்ச் 27 முதல் எட்டு கட்ட சட்டசபை தேர்தல் நடக்கும் மேற்குவங்க பேரணியில் பேரணியில் மோடி இன்று பேரணி முடிந்தவுடன் உரையாற்றவுள்ளார்.

தேர்தல் பேரணியில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

Views: - 7

0

0