ஜட்டி பனியனுடன் ரயிலில் உலா வந்த எம்எல்ஏ : முகம் சுழித்த பயணிகள்… எம்எல்ஏ கொடுத்த விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 7:11 pm
Gopal Mandal - Updatenews360
Quick Share

பாட்னா : எம்எல்ஏ ஒருவர் ரயிலில் ஜட்டியுடன் உலா வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாட்னாவில் இருந்து தேஜஸ் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏசி பெட்டியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர் பயணம் செய்தார்.

அப்போது எம்எல்ஏ திடீரென தன்னுடைய ஆடைய களைந்துவிட்டு ஜட்டி பனியனுடன் ரயிலுக்கு அங்குமிங்கும் நடந்து சென்றார். இதைப்பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுவெளியில் ஒருவர் ஏன் இப்படி செய்கிறார் என்று பயணிகளுக்கு தெரியவில்லை.

மேலும் அவர் எம்எல்ஏ என்று பயணிகளுக்கு தெரியவில்லை. அவரிடம் ஏன் அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டனர். இந்த கேள்விக்கு எம்எல்ஏ சரியாக பதிலளிக்காததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்துவிட்டனர். பின்னர் தான் தெரிந்தது அவர் எம்எல்ஏ என்று.. பின்னர் ரயில்வே பயணிகள் எம்எல்ஏவின் அநாகரீக நடவடிக்கை குறித்து புகார் அளித்தனர்.

பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் என்ன நடந்தா எனக்கென்ன என்பது போல எம்எல்ஏ ஜட்டி பனியனில் மீண்டும் உலா வந்தார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு வயிற்று வலி உள்ளதாகவும், பயணத்தின் போது வயிற்று போக்கு ஏற்பட்டதால் வேறு வழியின்றி ரயிலில் உள்ள கழிவறை பயன்படுத்தியதாகவும் விளக்கம் அளித்தார்.

Views: - 285

0

0