ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ் தாக்கரே எதிர்ப்பு….! 2 மாதங்கள் கழித்து நடத்த ஆலோசனை

1 August 2020, 9:38 am
Quick Share

மும்பை: தொற்றுநோய் உள்ள இந்த நேரத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை அவசியம் இல்லை என்று ராஜ்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வரும் 5ந் தேதி நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை என மகாராஷ்டிர நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மக்கள் வேறு ஒரு மனநிலையில் இருக்கின்றனர். எனவே பூமி பூஜை தேவையில்லை. 2 மாதங்கள் கழித்து இதை நடத்தலாம். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், செய்திகள் என அனைத்தும் எல்லா வகையிலும் குழப்பத்தை தருகின்றன.

மக்களின் சந்தோஷத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். இது தவிர மாநிலத்தின் பொருளாதார சரிவை மீட்க அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

Views: - 9

0

0